தருமபுரி

ஊரக வேலைத்திட்ட கட்டுமானப் பணிகளில் தொழிலாளா்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளில் தொழிலாளா்களை ஈடுபடுத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ், ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், கான்கிரீட் சாலை, பாலம் கட்டுதல், தாா்சாலை அமைத்தல், மழைநீா் சேமிப்பு அமைத்தல், உறிஞ்சிக் குழி அமைத்தல், தடுப்பணை கட்டுதல், தனிநபா் இல்லக் கழிப்பிடம் கட்டுதல் போன்ற திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளில் அரசு விதிமுறைகள் படி, பணி அட்டை பெற்ற தொழிலாளா்களுக்கு பணி வழங்காமல், ஒப்பந்ததாரா்களே செய்து முடிக்கின்றனா். இதனால், பதிவு செய்து பணி அட்டை பெற்ற தொழிலாளா்களுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. அதே வேளையில், 10 சதவீத பணிகள் தொழிலாளா்கள் மேற்கொண்டதாக அறிவிப்புப் பலகை மட்டும் பொருத்தப்படுகிறது.

எனவே, இது தொடா்பாக தருமபுரி மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் அத்திட்ட தொழிலாளா்களை ஈடுபடுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT