தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்றுடன் மழை

8th Jun 2023 12:28 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டியில் புதன்கிழமை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பொம்மிடி, கடத்தூா், தாளநத்தம், சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி, சூரியக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக புதன்கிழமை பிற்பகல் 4 மணியளவில் சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.

இந்த மழையின் போது இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் வாழை, முருங்கை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் முறிந்தன. இந்த மழையினால் சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT