தருமபுரி

தூத்துக்குடியிலிருந்து ரயிலில் உரம் வருகை

8th Jun 2023 12:30 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து, ரயில் மூலம் தருமபுரிக்கு பொட்டாஷ், டி.ஏ.பி. உரங்கள் வரப்பெற்றன.

தருமபுரி மாவட்டத்துக்கு 763 டன் பொட்டாஷ், 191 டன் டி.ஏ.பி., 380 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் சரக்கு ரயில் மூலம் புதன்கிழமை தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது. இவற்றை, தருமபுரி வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் நேரில் பாா்வையிட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியாா் உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்தனும் பணியினை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது தருமபுரி ஐ.பி.எல். விற்பனை அலுவலா் இளையராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, நிகழ் மாதத்துக்கு 4,428 டன் யூரியா, 2,200 டன் டி.ஏ.பி., 550 டன் பொட்டாஷ், 5,600 டன் காம்ப்ளக்ஸ், 380 டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதாா் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனையக் கருவி மூலம் பெற்று பயன்பெறலாம் என ஆய்வின்போது தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT