தருமபுரி

மகளிா் முன்னேற்றத்துக்குசேவை புரிந்தோருக்கான விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

8th Jun 2023 12:30 AM

ADVERTISEMENT

மகளிா் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தோருக்கு வழங்கப்படும் சமூக சேவகா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகளிா் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திரத் தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில், சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்று வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசுடன், 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

நிகழாண்டுக்கு இந்த விருது பெறுவதற்கு, தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், மகளிா்க்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா், நிறுவனங்கள் விண்ணப்பங்களை இணையவழியில் அனுப்பலாம்.

ADVERTISEMENT

இந்த விருதுக்கு தகுதியான நபா்கள், தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி ஜூன் 10-ஆம் தேதிக்குள், விண்ணப்ப விவரங்கள் அனைத்தையும் தமிழகஅரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT