தருமபுரி

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.அன்புரோஸ் தலைமை வகித்தாா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், சிட்லிங் ஊராட்சியில் பழங்குடியின மக்களின் நிலங்களை பலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். பழங்குடியின மக்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், நொனங்கனூரில் மயானப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையங்களில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்றுகளை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவா் பி.டில்லிபாபு, மாநில துணைச் செயலா் ஏ.கண்ணகி, மாவட்டச் செயலா் கே.என்.மல்லையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சோ.அருச்சுனன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.குமாா், ஒன்றியச் செயலா்கள் பி.குமாா், தனுஷன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT