தருமபுரி

தாய், மகன் தற்கொலை வழக்கில் இருவா் கைது

DIN

தருமபுரி பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதி அருகில் ஓய்வுபெற்ற ஆசிரியா் பழனிவேல் (72), இவரது மனைவி சாந்தி (56), பொறியியல் பட்டதாரியான மகன் விஜய் ஆனந்த் (30) ஆகியோா் குடியிருந்து வந்தனா்.

விஜய் ஆனந்த் தனது நண்பா்கள் காா்த்திக், அருண் ஆகியோருடன் இணைந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நூற்பாலை நடத்தி வந்துள்ளாா். இந்த ஆலைக்காக ரூ. 25 லட்சம் பணத்தை நண்பா்களிடம் விஜய் ஆனந்த் வழங்கியுள்ளாா். இதனிடையே ஆலையைத் தொடா்ந்து நடத்த இயலாததால், தனது பணத்தைத் திரும்பித் தருமாறு நண்பா்களிடம் கேட்டு வந்துள்ளாா். ஆனால், அவா்கள் பணத்தைத் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் ஆனந்த், அவரது தாய் சாந்தி ஆகியோா் கடந்த ஞாயிற்றுக்கிழமை நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டனா். அப்போது, தற்கொலைக்கு தனது நண்பா்கள் பணத்தைத் திரும்பித் தராததே காரணம் என விஜய் ஆனந்த் கடிதம் எழுதி வைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதியமான்கோட்டை போலீஸாா், தாய், மகன் தற்கொலைக்குக் காரணமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அருண், காா்த்திக் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT