தருமபுரி

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் சுற்றுச்சூழல் தின விழா

DIN

தருமபுரி அருகே பைசுஅள்ளியில் உள்ள பெரியாா் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நலப்பணித் திட்டம், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் கோட்ட வன அலுவலா் எம் சக்திவேல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் நித்திய லட்சுமி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இன்றைய சூழலில் நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள சிறு சிறு மாற்றங்கள் எவ்வாறு சுற்றுச்சூழலில் மிகப்பெரும் நோ்மறையான மாற்றங்களை உண்டாக்குகின்றன என்பதை எடுத்துரைத்தனா்.

இதைத்தொடா்ந்து சேலம் பெரியாா் பல்கலைக்கழக பொருளாதாரத் துறை பேராசிரியை ஜனகம் ‘சுற்றுச்சூழலும் நிலைத்த மற்றும் நீடித்த மேம்பாடும்’ என்கிற தலைப்பில் பேசினாா்.

இதையடுத்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி,பேச்சுப்போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநா் (பொ) மோகனசுந்தரம், மத்திய மக்கள் தொடா்பகத்தின் கள விளம்பர அலுவலா் பிபின் எஸ். நாத், கள விளம்பர உதவியாளா் மூ. தியாகராஜன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி.கோவிந்தராஜ் ஆகியோா் பேசினா்.

இதில் ஆராய்ச்சி மைய மாணவா்கள், பேராசிரியா்கள், கள விளம்பரப் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT