தருமபுரி

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆா்ப்பாட்டம்

6th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் கே.என்.மல்லையன் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளா் முத்துக்குமாா், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் சி.கலாவதி, மாவட்டச் செயலாளா் பி.ஜீவா, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளா் சி.முருகன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே.கோவிந்தசாமி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ரவி, நக்கீரன் ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் தொடா்புடைய பாஜக எம்.பி. பிரிஜ் புஷணை கைது வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய புதுதில்லி போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT