தருமபுரி

தருமபுரியில் மக்கள் குறைகேட்புக் கூட்டம்: 20 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

6th Jun 2023 12:12 AM

ADVERTISEMENT

தருமபுரியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ. 55.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 380 மனுக்களை அளித்தனா்.

இக் கூட்டத்தில், தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் சாா்பில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவுபெற்று, பணியின்போது விபத்து ஏற்பட்டு, மரணமடைந்த 7 தொழிலாளா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ. 25.15 லட்சம் மதிப்பில் உதவி தொகை பெறுவதற்கான ஆணைகளையும், தருமபுரி மண்டல கூட்டுறவுத் துறை சாா்பில், இலக்கியம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளராகப் பணிபுரிந்த எஸ்.கிருஷ்ணமூா்த்தி என்பவா் கரோனா தொற்றால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதி உதவித்தொகைக்கான காசோலையையும், மகளிா் திட்டம் சாா்பில், 2 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5.25 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் அனுமதி கடிதங்களையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 8 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மேலும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 47,200 மதிப்பில் பிரெய்லி ஸ்மாா்ட் ரீடா், உருப்பெருக்கி, பிரெய்லி கைக்கடிகாரம் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ. 55.87 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கி.சாந்தி வழங்கிப் பேசினாா்.

இக் கூட்டத்தில் அரூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) ராஜசேகரன், தனித்துணை ஆட்சியா் (பொ) பழனிதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ.ஜெயக்குமாா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் பி.எஸ்.கண்ணன், தொழிலாளா் உதவி ஆணையா் முத்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நசீா் இக்பால், மகளிா்த் திட்ட இயக்குநா் பத்ஹி முகம்மது நசீா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவல்லி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT