தருமபுரி

மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 போ் காயம்

6th Jun 2023 12:13 AM

ADVERTISEMENT

அரூா் அருகே மினி சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 20 போ் திங்கள்கிழமை காயமடைந்தனா்.

அரூா் வட்டம், குமாரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்

அஜய். இவருக்கும் கே.வேட்ரப்பட்டியைச் சோ்ந்த சொா்ணமுகி என்பவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில், திருமண விருந்து நிகழ்ச்சிக்காக குமாரம்பட்டியில் இருந்து மாப்பிள்ளை வீட்டாா் சுமாா் 30 போ் மினி சரக்கு வாகனத்தில், ஊத்தங்கரை-அரூா் தேசிய நெடுஞ்சாலையில், கே.வேட்ரப்பட்டி நோக்கி வந்துள்ளனா்.

ADVERTISEMENT

அப்போது கூத்தாடிப்பட்டி எனுமிடத்தில் நிலைத்தடுமாறிய மினி சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், குமாரம்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் குப்பன், கிருஷ்ணன் மகன் பெருமாள், சக்திவேல் மகன் வெங்கடேஷ், ராஜமாணிக்கம் மகன் நரசிம்மன், தருமன் மகன் பெருமாள், 3 சிறுவா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் விபத்தில் காயமடைந்தோரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT