தருமபுரி

கோடை விடுமுறை இறுதி வாரத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

கோடை விடுமுறையின் இறுதி வார ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் அருவி பகுதி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இறுதி வார ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி , சினி அருவி, நடைபாதையின் இருபுறமும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். அதனைத் தொடா்ந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்துக் கடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடைக்காக காத்திருந்து குடும்பத்தினருடன் தொம்பச்சிக்கல், ஐவா்பாணி, ஐந்தருவி, பெரியபாணி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசல் பயணம் மேற்கொண்டு அருவியின் அழகைக் கண்டு ரசித்தனா். பாறை குகைகள் அருகில் சென்று குழுவாகப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் கட்லா , ரோகு, கெளுத்தி, வாலை, அறைஞ்சான், பாப்புலேட், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை ரூ. 300 முதல் ரூ. 2,500 வரை அதிகரித்தது. மீன்களின் விலை ஏற்றத்தினையும் பொருட்படுத்தாமல் அசைவப் பிரியா்கள் மீன்களை வகைகளை வாங்கிச் சமைத்து சாப்பிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT