தருமபுரி

அளேபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருத்தோ் பிரமோற்சவம்

DIN

பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் திருத்தேரோட்ட பிரமோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பழைமை வாய்ந்த அளேபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் கூத்தப்பாடி,அளேபுரம், மடம், மல்லாபுரம், பூதிப்பட்டி, கே.அக்ரஹாரம், குள்ளாத்திரம்பட்டி உள்ளிட்ட 36 கிராமங்களுக்கு சொந்தமானது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

நிகழாண்டுக்கான தோ்த் திருவிழா இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் திங்கள்கிழமை மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி அன்ன வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை சிம்ம வாகனத்திலும், புதன்கிழமை அனுமந்த வாகனத்திலும், வியாழக்கிழமை சேஷ வாகனத்தில் வீதி உலா சென்று பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா். வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபோகமும், கருட உற்சவமும், சனிக்கிழமை யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மூலவரான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், வெண்ணெய், திருநீா், சந்தனம் பழங்கள், நெய் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து கோயிலில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி எழுந்தருளிய திருத்தேரை இந்து சமய அறநிலையத் துறையினா், கட்டளைதாரா்கள் கோயிலின் முக்கியஸ்தா்கள் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் ஒன்றிணைந்து கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு கோயிலைச் சுற்றி தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். இதில் தோ் மீது தானியங்கள், நாணயங்கள், பூக்கள் ஆகியவற்றை வீசினா். இதில் கட்டளைக்காரா்கள், கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT