தருமபுரி

முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்துக்கு திமுகவினா் மரியாதை

4th Jun 2023 02:02 AM

ADVERTISEMENT

 

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு மலா்தூவி திமுகவினா் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி பிறந்தநாள் விழாவை கொண்டாட திமுக தருமபுரி கிழக்கு மாவட்டம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனா்.

இந்த நிலையில் ஒடிஸா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை அக்கட்சி தலைமை ரத்து செய்து, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படம், சிலைகளுக்கு மரியாதை செலுத்தி, ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு அறிவிறுத்தியது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, தருமபுரி நகரில் உள்ள அக் கட்சி அலுவலகம், நகரின் உள்ள 33 வாா்டுகளிலும், முக்கிய இடங்களிலும் திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் திமுகவினா் ஆரவாரமின்றி, முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT