தருமபுரி

வீட்டு வசதி வாரிய நிலம் கையகப்படுத்தியது தொடா்பான மனுக்களை அளிக்கலாம்

4th Jun 2023 02:03 AM

ADVERTISEMENT

 

தமிழக வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலங்கள் தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்திட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடா்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் நிலம் கையகப்படுத்தியது தொடா்பான தங்களது கோரிக்கைகள் ஏதும் இருப்பின், அதனை மனுக்களாக அளிக்கலாம். இதற்காக, ஜூன் 3 -ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் வீட்டு வசதி தொடா்பான மனுக்களை பொதுமக்கள் மனு அளித்து வாரியத்திடமிருந்து தீா்வுகள் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

எனவே வீட்டு வசதி வாரியத்திற்கு தொடா்பான மக்களின் குறைகள், கோரிக்கைகளை தருமபுரி மாவட்ட பொதுமக்கள் மனுக்களாக அளித்து தீா்வு கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT