தருமபுரி

அதியமான் கிரிக்கெட் கிளப் சாா்பில் போட்டி:அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறாா்

4th Jun 2023 02:03 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அதியமான் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்து தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்டம், அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் கோப்பை தொடா் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அளவில் 15 மையங்களில் நடைபெற்றன.

ADVERTISEMENT

இப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதிபெற்று 4 மையங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில்

இறுதியாக விளையாடும் இரண்டு அணிகளுக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறாா். அதனை தொடா்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை அவா் வழங்குகிறாா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT