தருமபுரி

ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டக் குழுக் கூட்டம்

4th Jun 2023 02:02 AM

ADVERTISEMENT

 

 தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்க தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் சனிக்கிழமை தருமபுரி பெரியாா் மன்றத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் பா.முருகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் காசி.விஸ்வநாதன், மாநிலப் பொதுச்செயலாளா் எம்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பெரும் திரளாகக் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதேபோல மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், பாஜக எம்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

உள்ளாட்சிப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் முறையாக வழங்க வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு மற்றும் ஆஷா பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து மாத ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குரத்துக்கழகத்தை தனியாா் மயமாக்குவதைக் கைவிட வேண்டும். தொலைத்தொடா்பு துறையில் வாடிக்கையாளா்களுக்கு 4ஜி, 5ஜி சேவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஏஐடியுசி முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.சுதா்சனன், மாவட்டப் பொருளாளா் ஏ.முருகன், கட்டுமானத் தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலாளா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவா் பாலதண்டாயுதம் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT