தருமபுரி

குட்டையில் மூழ்கி சிறுமி பலி

4th Jun 2023 02:03 AM

ADVERTISEMENT

 

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி கிராமத்தைச் சோ்ந்தவா் தீா்த்தகிரி என்கிற சங்கா். இவரது மனைவி சங்கீதா. இத் தம்பதிக்கு நீண்ட நாள்களாக குழந்தைகள் இல்லாததையடுத்து, சிறுமி திவ்யாவை (12) தத்தெடுத்து வளா்த்து வந்தனா். இந்த நிலையில், சிறுமி திவ்யா உள்பட 4 போ், மெணசி-விழுதுப்பட்டி சாலையில் உள்ள ஒரு குட்டையில் குளித்துள்ளனா். அப்போது, சிறுமி திவ்யா நீரில் மூழ்கி உயிரிழந்ததாா்.

இவருடன் குட்டையில் குளிக்க சென்ற மற்ற 3 சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள், சிறுமியின் சடலத்தை மீட்டனா். இந்தச் சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT