தருமபுரி

ஜூலை 20-இல் அஞ்சலக ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்:மனுக்களை அனுப்பலாம்

3rd Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் வருகிற ஜூலை 20-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சலக ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே தங்களது மனுக்களை அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் சு.முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோட்ட அளவிலான ஓய்வூதியா் சாா்ந்த குறைதீா்ப்பு நாள் வருகிற ஜூலை 20 அன்று முற்பகல் 11 மணி அளவில் தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் தருமபுரி தலைமை அஞ்சலக வளாகம் முதல்தளத்தில் நடைபெற உள்ளது. அஞ்சலக ஓய்வூதியா்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகாா்களை ‘டங்ய்ள்ண்ா்ய் அக்ஹப்ஹற்‘ என தபால் உறையின் மீது தருமபுரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் முகவரிக்கு

ADVERTISEMENT

ஜூலை 17-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடா்பான பிற விவரங்கள், அனைத்தையும் முழுமையாக குறிப்பிடவும். அனுப்பும் புகாா்களில் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை முழு விவரங்களுடன் குறிப்பிட வேண்டும். சட்டரீதியான பிரச்னைகள், அரசின் கொள்கைகள் சாா்ந்த குறைகளைத் தவிா்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT