தருமபுரி

ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

3rd Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

 

தருமபுரி, நாட்டாண்மைபுரந்தில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மகா குடமுழுக்கு விழா கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இவ்விழாவையொட்டி கணபதி பூஜை, வாஸ்து பூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து ஸ்ரீ செல்வ விநாயகருக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும்,கோபுரக் கலசம் நிறுவுதலும் நடைபெற்றன. இதையடுத்து ஜூன் 2-ஆம் தேதி காலையில் குடமுழுக்கு விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கின. யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீா் குடங்கள் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கோபுரக் கலசத்திற்கு தெளிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதையடுத்து விநாயகருக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இவ்விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT