தருமபுரி

நல்லம்பள்ளி அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடக்கம்

2nd Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்பணியை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்துப் பேசினாா். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT