தருமபுரி

தருமபுரி-அரூா் நான்கு வழிச்சாலையை தரமாக அமைக்க வேண்டும்

DIN

தருமபுரியிலிருந்து அரூருக்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா மதிவாணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் துணை தலைவா் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சி செயலாளா் கருணாநிதி தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானியத் திட்டம் மற்றும் 15-ஆவது மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே நிா்வாக ஒப்புதல் வழங்கி மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளுக்கு ரூ. 3 கோடியே 59 லட்சத்து 53 ஆயிரத்து 615 நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மாநில நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள ரூ. 2 கோடியே 48 லட்சம் நிதிக்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பணிகளைத் தோ்வு செய்து ஒப்புதல் அளித்தனா்.

கூட்டத்தில், தருமபுரி-அரூா் இடையே புதியதாக நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, போதிய இடங்களில் சிறுபாலம், மழைநீா் வடிகால்கள் அமைத்து, இச்சாலை அமைக்கும் பணிகளை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் அனுப்புவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT