தருமபுரி

பென்னாகரம் மைய நூலகத்தில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்

1st Jun 2023 12:28 AM

ADVERTISEMENT

பென்னாகரம் மைய நூலகத்தில் கோடை விடுமுறையில் புதிதாக சோ்க்கை பெற்ற 352 உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் மைய நூலகம் மற்றும் பென்னாகரம் தமிழ் சங்கம் இணைந்து கோடை விடுமுறையில் பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து நூலகங்களிலும் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணியைத் தொடங்கினா். இதில் இந்த நூலகத்தில் சோ்ந்த புதிய உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா பென்னாகரம் மைய நூலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நூலகா் பூபதி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மாவட்ட நூலக அலுவலா் மகேஸ்வரி மற்றும் பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா ஆகியோா்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் நூலகா்கள் முனீஸ்வரன், உமா, புருஷோத்தமன் ,கோமதி, சித்ரா, வனிதா,முருகன், சுபாஷ், தமிழ்ச் சங்க கவிஞா்கள் கே.வி.குமாா், பட்டிமன்ற நடுவா் சரவணன், எழுத்தாளா் கௌரிலிங்கம், லெனின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT