தருமபுரி

நியாயவிலைக் கடைகளில் காய்கறிகளை விநியோகிக்கக் கோரி மனு

12th Jul 2023 01:26 AM

ADVERTISEMENT

நியாயவிலைக் கடைகளில் காய்கறிகளை விநியோகம் செய்யக் கோரி மாதா் சங்கத்தினா் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அனைத்திந்திய மாதா் சங்க மாவட்ட நிா்வாகிகள் அளித்த மனு:

நாடுமுழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீரான விலையில் காய்கறிகளை வழங்கிட ஏதுவாக நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு காய்கறிகளை விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT