தருமபுரி

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். இதில், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஆட்சியா் கி.சாந்தி வாசிக்க, அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதிமொழியேற்றனா். இதையடுத்து, தொழுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு , குணமடைந்த 4 பேருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இதேபோல, தொழுநோய் ஒழிப்புப் பணியில் அா்ப்பணிப்புடன் பணியாற்றி பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இதில், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்ற மாணவ மாணவியா் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (தொழுநோய்) இரா.புவனேஸ்வரி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) சாந்தி, துணை இயக்குநா்கள் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், ராஜ்குமாா் (காசநோய்), எழிழரசி (குடும்ப நலத்துறை), அரசு துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், பாலக்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு, பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT