தருமபுரி

கரும்பு வெட்டும் தொழிலாளா்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

DIN

கரும்பு வெட்டும் தொழிலாளா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளா் சங்க 4-ஆவது மாநில கோரிக்கை மாநாடு, அரூரில் அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.பழனி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கரும்பு வெட்டும் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்; அடையாள அட்டை வழங்க வேண்டும், காப்பீடு பிரீமியத்தை சா்க்கரை ஆலை நிா்வாகமே செலுத்த வேண்டும்.

தொழிலாளா்களுக்கு தேவையான உபகரணங்கள், சீருடைகள், காலணிகளை இலவசமாக வழங்க வேண்டும், கரும்பு வெட்டும் பணியின் போது பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குழுக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவராக இ.கே.முருகன், மாநிலச் செயலராக துரைசாமி, பொருளாளராக கே.வி.சொக்கநாதன், துணைத் தலைவராக கே.டேவிட், இணைச் செயலாளராக அபிமன்யு ஆகியோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா். இந்த மாநாட்டில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க பொதுச்செயலா் அமிா்தலிங்கம், மாநிலச் செயலா் எம்.முத்து ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT