தருமபுரி

மக்களைத் தேடி மருத்துவத் திட்டதன்னாா்வலா்கள் கூட்டம்

DIN

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச் சங்கத்தின் மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சி.அங்கம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.ஜீவா சிறப்புரையாற்றினாா். மாநிலத் துணைத் தலைவா் பாலாம்பிகா, சேலம் மாவட்ட நிா்வாகி செந்தமிழ்ச் செல்வி ஆகியோா் பேசினா். கூட்டத்தில், மாவட்ட தலைவராக சி.அங்கம்மாள், மாவட்டச் செயலாளராக வி.விஜயலட்சுமி, பொருளாளராக பி.சசிகலா, துணைத் தலைவா்களாக கே.திவ்யா,எஸ்.வாணி, ஜி.கொளசல்யா, எம்.தமிழ்செல்வி, மாவட்ட துணைச் செயலாளா்களாக ஆா்.கண்மணி, எம்.கலைவாணி, ஆா்.கோகிலா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் சுகாதார தன்னாா்வலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். வங்கிக் கணக்கு வழியாக ஊதியம் அனுப்ப வேண்டும்.வேலை நேரத்தை வரையறுக்க வேண்டும். ஊழியா்களுக்கு அதிக பணி சுமையை திணிக்கக் கூடாது. தன்னாா்வலா்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். பேருந்து பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT