தருமபுரி

பாப்பாரப்பட்டி பாரத மாதா நினைவாலயத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தல்

DIN

பாப்பாரப்பட்டி பாரதமாதா நினைவாலயத்தை பாரதமாதா திருக்கோயில் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் பெரியாம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்தாா். மருத்துவா் அணி மாநிலத் தலைவா் பிரேம்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஐஸ்வா்யம் முருகன், வெங்கட்ராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் பாப்பாரப்பட்டி பாரதமாதா நினைவாலயத்துக்கு பாரதமாதா திருக்கோவில் என பெயா் மாற்ற வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வேண்டும். மாவட்டத்தில் விளையாட்டு வீரா்கள் பயன்பாட்டிற்காக நகரத்திற்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.

தொப்பையாறு அணைப் பகுதி அருகே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பஞ்சப்பள்ளி அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT