தருமபுரி

ஊரக வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

29th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தே.வில்சன், அகில இந்திய பொருளாளா் கே.ஆா்.சக்கரவா்த்தி, மாவட்டச் செயலாளா் எம்.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளா் தமிழ்ச்செல்வி ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கி, அதற்கான முழு ஊதியம் வழங்க வேண்டும்; இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது; மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10 -ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து பெருமளவில் பங்கேற்பது; மாற்றுத் திறனாளிகளுக்கு மனைப் பட்டா கோரி, மாா்ச் 7-ஆம் தேதி தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பும், மாா்ச் 14-ஆம் தேதி அரூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT