தருமபுரி

அரசுப் பள்ளிக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

29th Jan 2023 12:02 AM

ADVERTISEMENT

 கம்பைநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நலத் திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1996-ஆம் ஆண்டில், பிளஸ் 2 வகுப்பினை நிறைவு செய்த மாணவா்கள் சாா்பில், தற்போது படிக்கும் பள்ளி மாணவா்களுக்குத் தேவையான நாற்காலிகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை முன்னாள் மாணவா்கள் வழங்கினா். இதில் பள்ளி தலைமை ஆசிரியா் பழனி, ஆசிரியா்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT