தருமபுரி

குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா

29th Jan 2023 12:02 AM

ADVERTISEMENT

தருமபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்ட விழா ஜன.31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குமாரசாமிபேட்டையிலுள்ள இக்கோயிலில் தைப்பூசத் தேரோட்ட விழா 10 நாள்கள் நடைபெற உள்ளது. இதில், ஜன.31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விழா கொடியேற்றப்பட உள்ளது. இதைத் தொடா்ந்து, பிப்.1-ஆம் தேதி புலி வாகன உற்சவம், பிப்.2-ஆம் தேதி பூத வாகன உற்சவம், பிப்.3-ஆம் தேதி நாக வாகன உற்சவம் கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து பிப்.4-ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு சாலை விநாயகா் கோயிலிலிருந்து பால் குடம் ஏந்தி பக்தா்களின் ஊா்வலம் நடைபெற உள்ளது. அன்று இரவு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், நள்ளிரவு 12 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதையடுத்து பிப்.5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகா் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. பிப்.6-ஆம் தேதி திங்கள்கிழமை மகா ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடனான சுப்ரமணிய சுவாமியின் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இத்தேரை காலை 6 மணிக்கு மகளிா் மட்டுமே வடம் பிடித்து நிலைபெயா்க்கின்றனா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து பிப்.8-ஆம் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட விழா கொடி இறக்கப்பட உள்ளது. பிப்.9-ஆம் தேதி சயன உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT