தருமபுரி

பென்னாகரத்தில் தீத் தடுப்பு விழிப்புணா்வு

DIN

தருமபுரி வனக் கோட்டம் சாா்பில் பென்னாகரத்தில் வனப் பகுதிகளில் நிகழும் தீ விபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, அதைக் கட்டுப்படுத்துவது குறித்து மாணவா்கள், பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

பென்னாகரம் வனத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பென்னாகரம் வனச்சரக அலுவலா் முருகன் தலைமை வகித்தாா். பென்னாகரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலா் ரகுபதி, சிறப்பு நிலைய அலுவலா் முரளி உள்ளிட்ட ஐந்து போ் அடங்கிய வீரா்கள் காடுகளில் ஏற்படும் தீ விபத்துக்கான காரணங்கள், தீயினால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள், காட்டுத்தீயை அணைப்பது, பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து வனத் தீ தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனா். இதில் ஒகேனக்கல் வன சரக அலுவலா் ராஜ்குமாா், வன பாதுகாப்பு படை சரக அலுவலா் ஆலயமணி, அரசு ஆண்கள் பள்ளி வேளாண்மை ஆசிரியா் கிருஷ்ணன், வன பாதுகாவலா்கள், வேட்டை தடுப்பு காவலா்கள், கிராம வனக் குழுவினா், மாணவா்கள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT