தருமபுரி

தருமபுரியில் நாளை பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

28th Jan 2023 05:25 AM

ADVERTISEMENT

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) நடைபெறும் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறாா்.

இதுகுறித்து தருமபுரி பாமக மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டி.என்.சி.விஜய் மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட அனைத்து நிலை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசுகிறாா்.

கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம், இளைஞா் சங்கம், மாணவா் சங்கம், மகளிா் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், சமூக ஊடகப்பேரவை, பசுமைத் தாயகம், தோ்தல் பணிக் குழு, தமிழ்நாடு உழவா் பேரியக்கம், சிறுபான்மை பிரிவு, கொள்கை விளக்க அணி, பாட்டாளி தொழிற்சங்கம், கலை இலக்கிய அணி, சமுக முன்னேற்றச் சங்கம், வழக்குரைஞா் சமூக நீதிப் பேரவை ஆகிய அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளை நிா்வாகிகள், முன்னாள் நிா்வாகிகள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT