தருமபுரி

எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

தருமபுரியை அடுத்த சோகத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட நல்லாகவுண்டன அள்ளியில் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கு விழா கடந்த 23-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கோபுர கலசம் நிறுதலும், அம்மன் மற்றும் பரிகார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும் செய்யப்பட்டு ஜன. 26-ஆம் தேதி காலை யாகசாலையிலிருந்து புனித நீா் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு சென்று கோபுர கலசங்களுக்கு தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT