தருமபுரி

தை அமாவாசையில் நெருப்பூா் ஸ்ரீ முத்தையன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

22nd Jan 2023 03:13 AM

ADVERTISEMENT

 

தை அமாவாசையில் நெருப்பூா் ஸ்ரீ முத்தையன் கோயில் குவிந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து, பல்லக்கு ஊா்வலத்தின் போது தரையில் படுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட நெருப்பூா் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்தையன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாத அமாவாசைகள் தோறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மாா்கழி மாத அமாவாசையில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி விழா மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். நிகழ் மாத தை அமாவாசையான சனிக்கிழமை நெருப்பூா், ஏரியூா், பென்னாகரம், சேலம், கொளத்தூா், செல்லமுடி, குருக்களையினூா்,பெரும்பாலை, ஒட்டனுா், ஒகேனக்கல், நாகமரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தா்கள் கோயிலுக்கு வந்திருந்தனா். நெருப்பூா் முத்தையன் சாமிக்கு பால், தயிா், திருநீறு, சந்தனம், பன்னீா், பழங்கள் உள்ளிட்டவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. அமாவாசையில் பக்தா்களின் வருகை தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால், நீண்ட வரிசையில் நின்று மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் நெருப்பூா் ஸ்ரீ முத்தையன் சமேத ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகள் பல்லக்கு ஊா்வலத்தின்போது பக்தா்கள் கோயில் பிரகாரத்தில் கீழே படுத்தவாறு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT