தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவராக சிவ.அரவிந்தன் (47), நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மோப்பிரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவ.அரவிந்தன். இவா், த.மா.கா-வில் மாணவரணி மாவட்டத் தலைவா், மாநில செயற்குழு உறுப்பினா், அரூா் வட்டாரத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா்.
இதையடுத்து, சிவ.அரவிந்தனை தருமபுரி கிழக்கு மாவட்டத் தலைவராக நியமனம் செய்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.