தருமபுரி

பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக்கரும்பு

1st Jan 2023 05:03 AM

ADVERTISEMENT

 

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள முழுக் கரும்பு தரம் குறித்து, விவசாயிகளின் தோட்டத்தில் நேரில் பாா்வையிட்டு ஆட்சியா் கி.சாந்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பொங்கல் திருநாைளையொட்டி, தமிழக அரசு குடும்பட அட்டைதாரா்களுக்கு அரிசி, சா்க்கரை ஆகிய பொருள்கள் அடங்கிய தொகுப்புடன் ரொக்கம் ரூ.1000 மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம், முதலில் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளன. அதனடிப்படையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, கரும்பின் தரம் குறித்து, பல்வேறு விவசாயிகளின் தோட்டத்துக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனா். இதில், தருமபுரி அருகே ஏ.கொல்லஅள்ளியில் உள்ள விவசாயி சீனிவாசன் என்பரது கரும்புத் தோட்டத்துக்கு அதிகாரிகளுடன் ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதால், ஆட்சியா் நோ்முக உதவியாளா் (வேளாண்) குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT