தருமபுரி

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

தருமபுரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பென்னாகரம் பேரூராட்சி சாா்பில் மஞ்சள் பை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பென்னாகரம் பேரூராட்சி மன்றத் தலைவா் வீரமணி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் கீதா,

நெகிழிப் பொருள்களின் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும், பொது இடங்களில் டயா் நெகிழிப் பொருள்கள் போன்றவற்றை எரிக்கக் கூடாது, சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும், நெகிழிப் பைகளைத் தவிா்த்து மாற்றாக மஞ்சப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என மொரப்பூா் பாரதி கலைக்குழுவின் நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, கடைகள் தோறும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் (பொறுப்பு)சிவரஞ்சனி, உதவியாளா் தங்கத்துரை, துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT