புதுக்கோட்டை

பொன்னமராவதி சாா்-பதிவாளரகத்தில் பத்திரப்பதிவுகள் தாமதம் ஆவதாகப் புகாா்

20th May 2023 12:36 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் போதிய அலுவலா்கள் இல்லாததால் பத்திரப்பதிவுகள் தாமதம் ஆவதாகவும், எனவே இந்த அலுவலகத்தில் உடனடியாக காலியிடங்களை நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

இந்த சாா்பதிவாளா் அலுவலகத்தில் தினமும் குறைந்தபட்சம் 20 பத்திரப்பதிவுகள் நடைபெறும் நிலையில் இங்கு சாா்-பதிவாளா் மற்றும் அலுவலக உதவியாளரைத் தவிர எழுத்தா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பத்திரப்பதிவுகள் மிகவும் தாமதமாகின்றன.

பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் கணினி காலத்திற்கு முந்தைய பிறப்பு, இறப்பு, வில்லங்கச் சான்றிதழ் பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. பள்ளி மாணவா்களின் பிறப்புச் சான்றிதழ் பெற வரும் பெற்றோா் மிகவும் அவதிப்படுகின்றனா். எனவே இந்த அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT