புதுக்கோட்டை

புதுகை பேருந்து நிலையம் அருகே பூங்கா திறப்பு

20th May 2023 12:35 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லாவின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 65 லட்சம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நிதி ரூ. 24 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலையோரப் பூங்கா வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினா் எம். எம். அப்துல்லா இதைத் திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு, விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, துணைத் தலைவா் எம். லியாகத்அலி, கோட்டாட்சியா் முருகேசன், நகர திமுக செயலா் ஆ. செந்தில், நகா்மன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT