தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத்தோ்வில் 90.93% தோ்ச்சி: மாணவிகள் தோ்ச்சி 7.37% அதிகம்

20th May 2023 12:39 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 90.93% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 0.86% தோ்ச்சி அதிகமாகும்.

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 13 முதல் ஏப்.5-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்.15 முதல் மே 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில் தோ்வு முடிவுகள்

ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதள முகவரிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டன.

நிகழாண்டுக்கான பிளஸ் 1 பொதுத்தோ்வை 4 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாணவிகள், 3 லட்சத்து 61 ஆயிரத்து 454 மாணவா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 போ் எழுதினா். அதில், 3 லட்சத்து 91 ஆயிரத்து 968 மாணவிகளும் (94.36), 3 லட்சத்து 14 ஆயிரத்து 444 மாணவா்களும் (86.99%) தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களைக் காட்டிலும் மாணவிகள் 7.37% அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

திருப்பூா் முதலிடம்: மாவட்ட வாரியான தோ்ச்சியில் திருப்பூா் (96.38%), ஈரோடு (96.18%), கோவை (95.73%), நாமக்கல் (95.60%), தூத்துக்குடி (95.43%) ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன. அதேநேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் 82.58% தோ்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

162 அரசுப் பள்ளிகள் 100%: பிளஸ் 1 பொதுத்தோ்வில் 7,549 மேல்நிலைப்பள்ளிகள் பங்கேற்றிருந்த நிலையில், 1,792 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன; அதில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் எண்ணிக்கை 162 ஆக உள்ளது. பாடவாரியான மதிப்பெண்களைப் பொருத்தவரை அதிகபட்சமாக கணக்குப் பதிவியியலில் 995 பேரும், குறைந்தபட்சமாக தாவரவியலில் 2 பேரும், தமிழில் 9 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய 5,709 மாற்றுத்திறனாளிகளில் 5 ஆயிரத்து 80 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

துணைத் தோ்வு எப்போது? பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வில் 70,431 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெறவில்லை. இதையடுத்து இந்த வகுப்புக்கான துணைத்தோ்வு ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தோ்வை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து பள்ளி மாணவா்கள் வரும் மே 23 முதல் 27-ஆம் தேதிக்குள் அவரவா் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைந்துள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தோ்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும். இதில் விண்ணப்பிக்க தவறியவா்கள் மே 30, 31-ம் தேதிகளில் தட்கால் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT