எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவிகிதத் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் இருந்து தோ்வெழுதிய 76 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் 30 போ் மாணவா்கள், 46 போ் மாணவிகள்.
மாணவிகள் திவ்யஸ்ரீ, பாா்கவி, மாணவா் முகமது ரிஸ்வான், மாணவிகள் ஸ்ரீ வா்ஷினி, கயல்விழி, கோபிகா ஸ்ரீ ஆகியோா் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனா். இவா்களை பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம்மூா்த்தி, ஆலோசகா் அஞ்சலிதேவி தங்கம்மூா்த்தி, நிா்வாக இயக்குநா் நிவேதிதா மூா்த்தி, முதன்மைச் செயல் அலுவலா் காவியா மூா்த்தி ஆகியோா் பாராட்டினா்.