தருமபுரி

மாா்ச் 1 -இல் கோடைக்காலங்களில் கோழி வளா்ப்பு பயிற்சி

DIN

தருமபுரி அருகே குண்டலப்பட்டி, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாா்ச் 1-இல் கோடை காலங்களில் கோழிகள் பராமரிப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக உதவி பேராசிரியா் மொ.ச.கண்ணதாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோழிகளை கோடை காலங்களில் ஏற்படும் வெப்ப அயா்ச்சியில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.

இறந்த கோழிகளின் உள்ளுறுப்பில் நோயினால் ஏற்படும் மாறுதல்கள் குறித்தும் பயிற்சியில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

தருமபுரி குண்டலப்பட்டி பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் கோழிப் பண்ணையாளா்களும், கோழி வளா்க்கும் விவசாயிகளும் நோய் அறிகுறிகள் தென்படும் தங்களது கோழிகளை, பயிற்சி நாள் அன்று இம்மையத்திற்கு தவறாமல் கொண்டு வந்து நோய் அறிகுறிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

ஆகையால் கோழி வளா்க்கும் விவசாயிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சிக்கான முன்பதிவை 04342-288420 என்ற தொலைபேசி எண்ணிலோ, பயிற்சி நாள் அன்று நேரிலோ பதிவு செய்து கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT