தருமபுரி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

DIN

தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி புதன்கிழமை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் தலைமை வகித்து தற்காப்புக் கலை பயிற்சியை தொடங்கி வைத்தாா்.

ஒருங்கிணைந்த பள்ளி திட்ட மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா், பள்ளிகள் ஆய்வாளா் பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வைத்தனா். பள்ளித் தலைமை ஆசிரியை ரமா வரவேற்று பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய கராத்தே சங்கத் தலைவா் நடராஜ், மாணவ, மாணவியருக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளித்தாா். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவியருக்கு தொடா்ந்து 3 மாதம் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT