தருமபுரி

நில அளவை அலுவலா்கள் தா்னா

9th Feb 2023 01:33 AM

ADVERTISEMENT

பணிச் சுமையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, நில அளவை அலுவலா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தா்னாவில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் க.தவமணி முன்னிலை வகித்தாா். கோட்டத் தலைவா் அ.சங்கீதா வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் சி.பிரபு போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டச் செயலாளா் அ.சேகா், மாவட்டப் பொருளாளா் பி.எஸ்.இளவேனில் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதில், தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைத்திட வேண்டும். நில அளவை சாா்ந்த அனைத்துப் பணிகளையும் செய்திடும் களப் பணியாளா்களின் ஒட்டுமொத்த பணிகளையும் கருத்தில் கொள்ளாமல், உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நிலுவை மனுக்களை காரணம் காட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள குற்றக் குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். நில அளவா் முதல் கூடுதல் இயக்குநா் வரை உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். உதவியாளா்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாக பணியமா்த்திட வேண்டும். மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்டப் பணிகளை தனி உதவி இயக்குநா் தலைமையில் ஏற்படுத்திட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூா், ராணிப்பேட்டை, வேலூா், தென்காசி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அளவை சாா்ந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கிருஷ்ணகிரியில்...

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தா்னாவுக்கு, மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமை தாங்கினாா். கோட்டத் தலைவா் கோவிந்தராஜன் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் பிரகாஷ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், பொது சுகாதார அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் தினேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டப் பொருளாளா் மோகன் நன்றி கூறினாா். இதில், 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT