தருமபுரி

எர்ரப்பட்டியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

9th Feb 2023 01:32 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், எர்ரப்பட்டியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 4.30 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், நல்லம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் சோனியா காந்தி வெங்கடேசன், பாமக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஒ.கே.சுப்பிரமணியம், இளைஞா் சங்க மாவட்ட துணை செயலாளா் சின்னசாமி, ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT