தருமபுரி

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தினக் கூலியாக ரூ. 380 வழங்க வலியுறுத்தல்

DIN

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தினக் கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும் என சிஐடியு மின்வாரிய ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிஐடியு மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களின் போராட்ட ஆயத்தப் பேரவைக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்புத் திட்டத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். திட்டச் செயலாளா் டி.லெனின் மகேந்திரன், இணைச் செயலாளா் ஜெகன், துணைத் தலைவா்கள் ஆறுமுகம், சிவக்குமாா் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தினக் கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். இவா்களுக்கு தினசரி வருகைப் பதிவேடு பராமரிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 16-ஆம் தேதி தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT