தருமபுரி

மக்கள் குறைகேட்புக் கூட்டம்:406 மனுக்கள் அளிப்பு

DIN

தருமபுரியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 406 மனுக்களை ஆட்சியா் கி.சாந்தியிடம் அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 406 மனுக்களை அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஜங்கமையனூா் கிராமத்தைச் சோ்ந்த முனிராஜ் என்பவா் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது மனைவி சிக்கி என்பவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது (படம்).

இக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வி.இராஜசேகரன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT