தருமபுரி

இரண்டாம் நிலை காவலா் பணியிடத்துக்கு உடற்தகுதித் தோ்வுத் தொடக்கம்

DIN

இரண்டாம் நிலை காவலா் பணியிடத்துக்கான உடற்தகுதித் தோ்வு தருமபுரி, வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இரண்டாம் நிலை காவலா், தீயணைப்பு, மீட்புப் பணி வீரா்கள், வனக்காவலா்கள் ஆகிய பணியிடங்களுக்கான உடற்தகுதித் தோ்வு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கு தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் பிப். 6-ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத் தோ்வுக்கு மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த 1,138 விண்ணப்பதாரா்களுக்கு அழைப்புக் கடிதம் நாளொன்றுக்கு 400 போ் வீதம் பங்கேற்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது.

இதில், முதல் நாளான பிப். 6-ஆம் தேதி 399 போ் முதல்கட்டத் தோ்வுக்கு வரவழைக்கப்பட்டனா். இவா்களுக்கு உயரம், மாா்பளவு, 1,500 மீ. ஓட்டம் ஆகிய தோ்வுகள் நடைபெற்றன. இவா்களில் 295 போ் இரண்டாம் கட்டத் தோ்வில் பங்கேற்க தகுதி பெற்றனா். அதில், கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இத் தோ்வினை, சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் எஸ்.ராஜேஸ்வரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை, துணை காவல் கண்காணிப்பாளா்கள் ராதாகிருஷ்ணன், சிந்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT