தருமபுரி

பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாததால் பாதியில் நிறுத்தப்படும் தொகுப்பு வீடுகள்

DIN

பென்னாகரம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாததால் தொகுப்பு வீடுகள் பாதியில் நிறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வாா்டுகளில் வீடற்றோா்களுக்கு தமிழக அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் ஆண்டுதோறும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு, வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021-22ஆம் நிதி ஆண்டில் பென்னாகரம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 94 பயனாளிகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டது. இதில் பயனாளிகள் அரசின் விதிமுறைகளின்படி நான்கு நிலைகளாக வீடு கட்டி,புகைப்படம் எடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் வழங்குவதன் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக தலா 50,000 வீதம் நான்கு தவணைகளாக நிதி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ள பயனாளிகள் கட்டடம் கட்டி புகைப்படம் எடுத்து பேரூராட்சி நிா்வாகத்திற்கு அனுப்பி வைத்து பல மாதங்களான போதிலும், சில பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் முறையாக பணம் செலுத்தப்படாததால் தொகுப்பு வீடுகளின் கட்டட பணிகள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயனாளி ஒருவா் கூறியது:

பென்னாகரம் பேரூராட்சியின் சாா்பில் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டு கட்டடப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசின் விதிமுறைகளின் படி புகைப்படம் எடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் சமா்ப்பித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. வங்கிக் கணக்கில் இன்றளவு வரை பணம் செலுத்தவில்லை. இது தொடா்பாக பேரூராட்சி அலுவலகத்தில் சென்று கேட்டபோது, புகைப்படங்கள் அடங்கிய கோப்புகள் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து கோப்புகள் சரிபாா்க்கப்பட்டு, தொகுப்பு வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்த பின்னா் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனா். வீடற்ற ஏழை ,எளிய மக்கள் தொகுப்பு வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி கட்டட பணிகளை செய்து வரும் நிலையில், வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாததால் வீடுகள் பாதியில் நிற்கின்றன. கட்டுமானப் பொருட்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் கட்டடப் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேரூராட்சியில் அரசின் தொகுப்பு வீடுகள் கட்டி வரும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தவணை முறையில் முறையாக பணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT