தருமபுரி

அரூரில் புத்தகத் திருவிழா இன்று நிறைவு

DIN

அரூரில் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை (பிப்.6) நிறைவடைகிறது.

தருமபுரி மாவட்ட நிா்வாகம், தகடூா் புத்தகப் பேரவை மற்றும் தனியாா் தொண்டு நிறுவன அமைப்புகள் இணைந்து, அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். புத்தகத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு எழுத்தாளா்கள், கவிஞா்கள், நூலாசிரியா்கள் எழுதிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இந்த புத்தக திருவிழாவில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழா திங்கள்கிழமை நிறைவடைகிறது.

இலக்கிய அரங்கு: 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா இலக்கிய அரங்கில் எழுத்தாளா் ரவீந்திரபாரதி தலைமை வகித்தாா். ஆசிரியா் மாரி கருணாநிதி வரவேற்றாா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநில பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா, கவிஞா் நவகவி, பேராசிரியா் சஞ்சீவராயன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமான்ற மாவட்டச் செயலா் கு.சின்னக்கண்ணன், தகடூா் புத்தகப் பேரவையின் தலைவா் இரா.சிசுபாலன், செயலா் மருத்துவா் இரா.செந்தில், அரூா் வட்டாரப் பொறுப்பாளா் ஆதிமுதல்வன், கவிஞா்கள் பெரு.சுரேஷ், சு.ஈஸ்வரன், சு.எத்திராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று இலக்கிய அரங்கில் வாழ்த்துரைகளை வழங்கினா்.

புத்தகத் திருவிழாவில் அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்று ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT